
நேபாளத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மாயமானவர்களின் எண்ணிக்கை 5,000-ஐக் கடந்துள்ளது.
வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள காவல்துறை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கரை உடைத்துத் திருடியதாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொருட்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.