
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் இரண்டரை நிமிட டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் வாமிகா மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.
வன்முறை காட்சிகள் மற்றும் ‘தப்பு பண்ணுனவங்களை திருத்த வேண்டிய போலீஸே தப்பு பண்ணினா’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரெய்லர் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.