
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, பிரேசிலின் எம்பிராயர் நிறுவனத்திடம் இருந்து 150 பிராந்திய ஜெட் விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆரம்ப கட்டமாக 100 விமானங்களை வாங்கவும், கூடுதலாக 50 விமானங்களை வாங்குவதற்கான விருப்பத்தேர்வை பரிசீலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் இது ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.