
பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி அரையிறுதியில், ஈஸ்ட் சோன் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 81 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அசத்தினார்.
தனது 15 வயது 157 நாட்களில் 42 பந்துகளில் அரைசதம் கடந்த வைபவ், துலீப் டிராபி வரலாற்றில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இழந்த வைபவ், ஹர்ஷ் துபே பந்துவீச்சில் சதத்தை நெருங்கியபோது ஆட்டமிழந்தார்.