
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம், வெளியான 15 நாட்களுக்குள் இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
படம் வெளியாகி 15-வது நாளில் இந்தியாவில் ரூ.5.99 கோடியும், வெளிநாடுகளில் ரூ.2 கோடியும் வசூலித்துள்ள நிலையில், மொத்தமாக ரூ.766.65 கோடியைக் கடந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.