
வாஷிங்டனில் நடைபெறும் சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகெர் காயத்தால் விலகியதால் நவோமி ஒசாகா காலிறுதிக்கு முன்னேறினார்.
முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய ஒசாகா, இரண்டாவது செட்டில் 3-1 என முன்னிலையில் இருந்தபோது எதிராளி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் நவோமி ஒசாகா, இத்தாலியின் எலிசாபெட்டா என்பவரை எதிர்கொள்ள உள்ளார்.