
புரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு' படத்தில், தபு வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கும் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
கெளரி ஹெக்டே என்ற கதாபாத்திரத்தில் தபு ஆளுமை மிக்க அதிகாரியாக நடிக்கும் இந்தப் படம், பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.
சம்யுக்தா, துனியா விஜய்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கிறார், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.