
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் குழந்தைகளுக்கு வழங்கும் மூன்று பால் பவுடர் தயாரிப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
நிறுவனத்தின் 'நான் எக்செல்லா புரோ ஸ்டேஜ் 1' மற்றும் 'லாக்டோஜென் புரோ 1' பால் பவுடர் விளம்பரங்களில் தாய்ப்பால் சர்க்கரை மற்றும் வெய் புரோட்டீன் குறித்த தகவல்கள் விதிமீறலாக உள்ளதாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் 'பாலோ அப் பார்முலா' பவுடரில் பயோட்டின் எனப்படும் வைட்டமின் பி7 சத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குறைவாக இருப்பது ஆய்வக சோதனையில் கண்டறியப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.