
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் மொத்தமுள்ள 100 உறுப்பினர்களில், ஆளும் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும் ஜனநாயகக் கட்சிக்கு 45 உறுப்பினர்களும் உள்ளனர்.
கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில் ஆளும் குடியரசுக் கட்சி 218 இடங்களையும், ஜனநாயகக் கட்சி 214 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
இரு அவைகளிலும் ஆளும் குடியரசுக் கட்சி நூலிழை பெரும்பான்மையையே பெற்றுள்ளதாக நிலவரங்கள் தெரிவிக்கின்றன.