
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 2 இஸ்ரேலிய பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கு கரையின் எல்லைகளை இஸ்ரேல் மூடியுள்ளதுடன், அங்கு பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகளையும் திட்டமிட்டுள்ளது.