
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதிகள் சாம்பலாகியுள்ளன.
ஸ்பெயினில் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸில் 1.60 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் பேரழிவைச் சந்தித்துள்ளது.
கிரீஸின் கிரீட் தீவில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 3 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சர்வதேச தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர்.