
லா லிகா கால்பந்து தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் ராயோ வலேகானோ அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ராயோ அணி முன்னிலை பெற்ற நிலையில், பார்சிலோனா வீரர் ரபின்ஹா 19-வது நிமிடத்திலும், லாமின் யமால் 29-வது நிமிடத்திலும் கோல் அடித்து முன்னிலைப்படுத்தினர்.
இரண்டாவது பாதியில் ரபின்ஹா மற்றும் லாமின் யமால் தலா ஒரு கோல் அடிக்க, ராயோ அணியின் புளோரியன் லெஜியூன் ஒரு சொந்த கோல் போட்டதால் பார்சிலோனா வெற்றி உறுதி செய்யப்பட்டது.