
விமானம் மற்றும் ராணுவம் சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மஹிந்திரா குழுமத்தின் நோவாவையு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளைப் பிரேசில் நாட்டின் எம்பிரயர் நிறுவனம் வாங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பங்கு விற்பனை ஒப்பந்தத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நிறுவனம் எம்பிரயர் நிறுவனத்தின் துணை நிறுவனமாக மாறவுள்ளது.
ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின், எம்பிரயர் நிறுவனம் 51 சதவீத பங்குகளையும், மஹிந்திரா டிபன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம் மீதமுள்ள 49 சதவீத பங்குகளையும் வைத்திருக்கும்.