
ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில் 5வது சீசன் பாரா ஆசிய விளையாட்டு கண்கவர் நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.
45 நாடுகளை சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியில் இந்தியா சார்பில் 168 பேர் கலந்துகொள்கின்றனர்.
இந்திய அணி சார்பில் தொடக்க விழாவில் பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத் மற்றும் தடகள வீராங்கனை சிம்ரன் சர்மா ஆகியோர் மூவர்ணக்கொடியை ஏந்தி வந்தனர்.