
சென்னை மாநகராட்சி மாதாந்திரக் கூட்டத்தில், மண்டலம் 11-ல் விநியோகிக்கப்படும் குடிநீரில் மலம் கலந்திருப்பதாக திமுக கவுன்சிலர் வே.ராஜன் குற்றம் சாட்டினார்.
சோதனை அறிக்கையில் E.Coli பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
சென்னையின் 15 மண்டலங்களிலும் இந்தப் பிரச்சனை இருப்பதாகக் கூறிய அவர், மாநகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.