
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி., - எப் - 17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்., - 05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த நிதியாண்டில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுதல் இதுவாகும், மேலும் இந்த ஆண்டில் கூடுதலாக 6 ஏவுதல்களை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோ தலைவர் நாராயணன், இந்த வெற்றிக்காக பாடுபட்ட குழுவினருக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என உறுதி அளித்தார்.