
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய் மீது சங்கீதா தொடர்ந்திருந்த விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரும் வழக்கை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.
நீதிபதி சுஜாதா முன்னிலையில் லண்டனில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஆஜரான சங்கீதா, சுமார் 20 நிமிடங்கள் விளக்கம் அளித்த பிறகு இந்த முடிவை அறிவித்தார்.
பிள்ளைகளின் நலன் மற்றும் சமூக வலைதள விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு சங்கீதா இந்த வழக்கை முடித்து வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.