
கொளத்தூர் தொகுதியில் விவிபேட் இயந்திரங்களை சரிபார்க்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான மே 7-ம் தேதி விண்ணப்பித்தாலும், 45 நாட்களுக்குப் பிறகே இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு நிராகரித்தது.