/nakkheeran/media/media_files/2026/09/28/nd-2026-09-28-12-04-20.jpg)
கடந்த 7 மாதங்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தொடர்ந்துவரும் நிலையில், போரை நிறுத்த ஈரான் விதித்த 7 நிபந்தனைகளை ஏற்க அமெரிக்கா மறுத்துவிட்டது.
ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 96 டாலராகவும், பிரென்ட் ரகம் 106 டாலராகவும் உயர்ந்துள்ளது.
போர் தொடர்ந்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உலக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.