
எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு உள்ள பெண்களுக்கு 'டைப் 2' நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 46 சதவீதம் அதிகம் என ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
1996 முதல் 2021 வரை 30 லட்சம் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உடலில் ஏற்படும் நாள்பட்ட அழற்சி இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.
மாதவிடாய் நிறுத்தத்துக்கு முந்தைய பருவத்தில் உள்ள பெண்களுக்கும், உடல் பருமன் இல்லாதவர்களுக்கும் இந்த அபாயம் அதிகமாக இருப்பதால் ஆரம்பக்கட்ட பரிசோதனை அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.