
அமெரிக்காவில் அமேசான் பிரைம் ஏர் சேவை மூலம் டெலிவரி செய்யப்பட்ட பார்சல், வாடிக்கையாளரின் வீட்டின் நீச்சல் குளத்தில் விழுந்த வீடியோ வைரலாகியுள்ளது.
லிண்ட்சே ஆஸ்டன் என்ற வாடிக்கையாளர் தனது பார்சலை ட்ரோன் மூலம் பெற காத்திருந்தபோது, ட்ரோன் பார்சலை குளத்திற்கு மேலே நழுவ விட்டது.
இந்த சம்பவம் அரிதானது என்று அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ள நிலையில், இனி வான்வழி டெலிவரியைப் பயன்படுத்தப் போவதில்லை என வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.