
பிரபல தொகுப்பாளினி விஜே எழிலரசி, நடிகர் அட்டகத்தி தினேஷ் உடனான தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
விஜே எழிலரசி தனது பதிவில், தினேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பயணங்கள் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அவரை மட்டும்தான் தேர்ந்தெடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தினேஷ், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘குக்கூ’, ‘விசாரணை’ போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றவர், தற்போது ‘பந்தா கேங்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.