
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யப் படை நடத்திய தீவிர ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் 21 வயது பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
சோலோமியான்ஸ்கி நகரில் உள்ள 25 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்ததுடன், வணிக வளாகங்கள், பள்ளிகள் மற்றும் மெட்ரோ நிலையமும் சேதமடைந்துள்ளது.
நேற்று இரவு முழுவதும் கீவ் நகரை நோக்கித் தொடர்ச்சியாகப் பாய்ந்த ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் பதிவாகியுள்ளன.