
2026 மகளிர் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் ஜப்பானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நகோயாவில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய ஜப்பான் அணியை 19.5 ஓவர்களில் 57 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணியின் ஸ்ரீ சரணி 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எளிய இலக்கை நோக்கி களம் கண்ட இந்திய அணியில் ஷபாலி வர்மா 15 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க, இந்திய அணி வெறும் 5 ஓவர்களில் 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.