
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக எவிக்ஷன் முடிவு போட்டியாளர்களின் கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் கேப்டன் வினோத் பாபுவால் நாமினேட் செய்யப்பட்டுள்ள தன்யா பல்லத், முனியம்மாள் மற்றும் சவின்யா ஆகிய மூவரில் ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்றும் முடிவை சக போட்டியாளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
இந்த புதிய முறை வீட்டிற்குள் நட்பும் பகையும் தனிப்பட்ட உறவுகளையும் சோதனைக்கு உள்ளாக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.