வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான புதிய கடன் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது, இவை ஏப்ரல் 1, 2027 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.
கடன்களுக்கான வட்டி தினசரி குறையும் நிலுவைத் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும் என்றும், சிறு விவசாயிகளின் மொத்த வட்டி அசல் தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பழைய கடன்களை புதிய முறைக்கு மாற்ற ஏப்ரல் 1, 2029 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு, இதற்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.