தமிழகத்தில் பருவமழை காலத்தில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, 4,000 மருத்துவமனைகள் மற்றும் 5,000 ஆய்வகங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டில் 50,000 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்த நிலையில், நடப்பாண்டில் தற்போது வரை 11,000 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் நடப்பாண்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பொதுமக்கள் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், காய்ச்சி வடிகட்டிய நீரை அருந்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.