
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் கஜகஸ்தானின் எலெனா ரைபகினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் கோ கோ காஃபுடன் மோதிய இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த ரைபகினா, அடுத்த இரண்டு செட்களைக் கைப்பற்றி வெற்றி கண்டார்.
2 மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டம் 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் நிறைவடைந்தது.