
பாரிஸ் கஃபே திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் விஸ்வா, இயக்குநர் பா.ரஞ்சித்தை 'போலி போராளி' என விமர்சித்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் பா.ரஞ்சித் குரல் கொடுக்கவில்லை என்று விஜய் விஸ்வா குற்றம் சாட்டினார்.
இதற்கு சமூக ஆர்வலர் கௌசல்யா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிஆர்ஓ ரியாஸ் படத்தை தாண்டி அரசியல் பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டு வாக்குவாதத்தை முடித்து வைத்தார்.