இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 95,035 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 72 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,699 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர், மேலும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதி-அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக மேல் மாகாணத்தில் 50,287 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 20,248 பேரும் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.