
சர்க்கரை விலை கடந்த மாதம் ரூ.47-லிருந்து தற்போது ரூ.60-ஐத் தாண்டி உயர்ந்துள்ளதால், பற்றாக்குறையைச் சமாளிக்க 10 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை இறக்குமதி செய்யப்பட உள்ளது.
எல் நினோ தாக்கத்தால் கரும்பு உற்பத்தி பாதிப்பு மற்றும் எத்தனால் உற்பத்திக்காக கரும்பு பயன்படுத்தப்படுவது விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
பிரேசிலில் இருந்து சரக்கு கப்பல்கள் மூலம் சர்க்கரை வர 40 முதல் 45 நாட்கள் ஆகலாம் என்றும், அக்டோபர் மாத அறுவடைக்குப் பின் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.