
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசு செய்தி நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் அவர் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அவர் பொதுவெளியில் தோன்றாமல் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என ஈரான் அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளதாக துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.