
முட்டையில் உள்ள புரதத்தின் உயிரியல் தன்மை 100 சதவீதம் என்பதால், மற்ற உணவுகளின் புரதத்தை மதிப்பிடுவதற்கான 'தங்க தரநிலையாக' இது கருதப்படுகிறது.
முட்டை மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் உள்ளது உண்மை என்றாலும், உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலை கல்லீரலே உற்பத்தி செய்வதால் மிதமாக சாப்பிடுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை.
இதயநோய் உள்ளவர்கள் உட்பட அனைவரும் ஒரு நாளைக்கு 1 முதல் 2 முட்டைகள் வரை மஞ்சள் கருவுடன் தாராளமாகச் சாப்பிடலாம் என உணவு ஆலோசகர் டாக்டர் அருண்குமார் விளக்கியுள்ளார்.