
பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணம் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் பதுங்கியிருந்த 4 தலிபான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சுடப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் கரன்சி நோட்டுகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.