
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10,000 கனஅடியில் இருந்து இன்று பிற்பகல் நிலவரப்படி 6,500 கனஅடியாகக் குறைந்துள்ளது.
நீர்வரத்து சீரற்ற நிலையில் இருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 11-வது நாளாக நீடிக்கிறது.
நீர்வரத்து சரிந்ததைத் தொடர்ந்து, பரிசல் சவாரியை மீண்டும் அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.