
தமிழ்நாட்டில் அதிக அளவில் கடன் உள்ளதாகவும், அதை எப்படிக் குறைப்பது மற்றும் வருமானத்தை அதிகரிப்பது குறித்து முதலமைச்சர் விஜய் யோசித்து வருவதாகவும் நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
பெரம்பூரில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் நிதி அமைச்சர் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
ஊழலுக்கு எதிரான புரட்சியை முதலமைச்சர் விஜய் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்றுப் பேசினார்.