
ஈரானின் அணுசக்தி நிலையங்களின் யுரேனிய இருப்பின் நிலையைச் சரிபார்க்க முடியவில்லை என ஐ.நா. முகமை தெரிவித்துள்ளது.
ராணுவத் தாக்குதல்களால் சேதமடைந்த அணுசக்தி நிலையங்களை ஈரான் சீரமைக்கவில்லை என ரபேல் கிரோசி கூறினார்.
சேதமடைந்தவை உள்பட அனைத்து நிலையங்களையும் ஆய்வு செய்ய ஆய்வாளர்களை அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.