
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியைத் தொடங்கியுள்ளதாக அவரது இளைய மகள் சௌந்தர்யா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
75 வயதாகும் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து தர்மன் மற்றும் கமல்ஹாசனுடன் ஒரு படம் எனத் தனது திரைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
ரஜினியின் வாழ்க்கை பயணம் அசாதாரணமானது என்பதால், இந்த சுயசரிதை புத்தகம் பலருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமையும் என சௌந்தர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.