
லண்டனில் நடைபெறும் கிளாசிக் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அனாஹத் சிங் 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முன்னேறினார்.
39 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், பெல்ஜியத்தின் நேலே கிலிஸை 13-11, 4-11, 11-8 என்ற புள்ளிக்கணக்கில் அனாஹத் வீழ்த்தினார்.
ஆண்களுக்கான பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் ரமித் டான்டன், இங்கிலாந்தின் முகமது எல் ஷோர்பாகியிடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.