
தமிழ்நாட்டில் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களைப் பாதிக்கும் 'யங் ஸ்ட்ரோக்' எனப்படும் பக்கவாத பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதிகாரபூர்வ தரவுகளின்படி பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை 2019-ல் 19,167 ஆக இருந்தது 2024-ல் 32,802 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போன்ற அரசு மருத்துவமனைகளில் 'SCRIPT' சிறப்புத் திட்டம் மூலம் அதிநவீன சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.