
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.
இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், செக் குடியரசின் ஜிரி லெஹெகாவுடன் மோதினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 7-6 (7-4) 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.