
கியா நிறுவனம் தனது முதல் ஹைப்ரிட் எஸ்யூவி காரான சொரெண்டோவை 27.99 லட்சம் முதல் 40.19 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கார் 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைப்பதுடன், 25,000 ரூபாய் முன்பணம் செலுத்தி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் அசெம்பிள் செய்யப்படும் இந்த கார், லெவல்-2 ADAS பாதுகாப்பு அமைப்பு மற்றும் 10 ஏர்பேக்குகளுடன் விற்பனைக்கு வருகிறது.