
எஸ்.ஐ.ஆர் மூலம் நாடு முழுவதும் 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் ராஜ்மோகன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்றும் கோரி நடைபெற்ற இந்த போராட்டம் தங்களது இலக்கை அடையும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.