
எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்றுவரும் உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ஜக்சேர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தோனேசிய வீரர் ராதித்யா பயு வர்தனாவுடன் மோதிய ஜக்சேர் சிங் 6-15, 15-13, 3-15 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
இதன் மூலம் உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற 9-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.