
மும்பையில் இன்று தொடங்கிய ரிசர்வ் வங்கியின் 3 நாள் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில், வங்கிக்கடன் வட்டி விகிதங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
தற்போதைய ரெப்போ ரேட் 5.25 சதவீதமாக உள்ள நிலையில், பணவீக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இதில் மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வரும் 5-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.