
ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கப்பல்கள் செல்வதற்குத் தடை விதிக்கும் புதிய வரைவுத் திட்டத்தை ஈரான் தயார் செய்துள்ளது.
போர் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் இழப்பீடு வழங்கினால் மட்டுமே கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
முன்னதாக அமெரிக்கா ஈரானிய கப்பல்கள் போக்குவரத்தில் சிக்கலை ஏற்படுத்திய நிலையில், ஈரான் இந்த புதிய கட்டுப்பாடுகளைத் திட்டமிட்டுள்ளது.