
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஹார்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானை முழுமையாக தனிமைப்படுத்தும் நோக்கில் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப அறிவித்துள்ளார்.
ஈரானின் எண்ணெய் கடத்தல், நாணயப் பரிமாற்றம், கப்பல் பதிவு மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உதவும் எந்தவொரு நாட்டின் மீதும் மிகக் கடுமையான பொருளாதாரத் தண்டனைகள் விதிக்கப்படும் என்று ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் கடற்படை மற்றும் ராணுவத் தொழிற்சாலைகள் தரைமட்டமாகிவிட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், இந்த புதிய நடவடிக்கைகள் மூலம் ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.