
காவிரி விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கண்டித்து தவெக மகளிரணி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.
தவெக கொடியை அகற்றியது மற்றும் முதல்வர் விஜய் உருவபொம்மையை எரித்தது தொடர்பாக தவெக அளித்த புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த நீலகண்டன், கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீசார், கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.