
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் தனது 4-வது கிளவுட் ரீஜியனை ஹைதராபாத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இந்த புதிய மையம் இந்தியாவின் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிளவுட் ரீஜியன், நாட்டின் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.