
காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படி, தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கன அடி வீதம் நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் நான்கு அணைகளில் தற்போது 67.078 டி.எம்.சி நீர் இருப்பு உள்ள நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்தால் உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.